Freelancer / 2025 ஜனவரி 05 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்களை பரிசீலிக்க குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனை நாளை (6) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படும் என எரிசக்தி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்கள் தொடர்பிலேயே இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் அலகு ஒன்றுக்கு 8.26 சதம் டொலர் வீதம் செலுத்துவதற்கு கடந்த அரசாங்கத்தின் அமைச்சரவை இணக்கம் தெரிவித்திருந்தது.
குறித்த உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்காக இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. R
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago