2021 ஜூலை 31, சனிக்கிழமை

அமைச்சரவை கூடும் நாளில் மாற்றம்

Editorial   / 2020 செப்டெம்பர் 21 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வாரத்தில் இருந்து அமைச்சரவை கூட்டத்தை திங்கட்கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (21) பிற்பகல் 04 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாலக கலுவெல தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து வரும் காலங்களிலும் அமைச்சரவை கூட்டம் திங்கட்கிழமைகளில் நடைபெறும்.

இதனையடுத்து, அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளதாக  நாலக கலுவெல குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை அமைச்சரவை கூட்டம் புதன்கிழமைகளில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .