Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நேற்று முன்தினம் (22) ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அமைச்சரவை கூடியதாகத் தெரிவித்த அமைச்சரவை இணைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதன் வெற்றிகரச் செயற்பாடு குறித்தே இதன்போது அதிகம் கவனம் செலுத்தப்பட்டதென்றார்.
இதற்கமைய அனுமதியளிக்கப்பட்ட அமைச்சரவை முடிவுகள் வருமாறு,
சிறிய மற்றும் நடுத்தர தேசிய இறக்குமதியாளர்களுக்கு, தனியாக தமது நிறுவனங்களுக்கு உள்ள தடை தொடர்பான மேன்முறையீடுகளை நிதி அமைச்சிடம் முன்வைப்பதற்கான வாய்ப்பை வழங்குதல்
வாகனங்கள் மற்றும் ஏனைய பொருள்களை ஹம்பாந்தோட்டை, கொழும்பு தறைமுகத்திலிருந்து விடுவிப்பதற்காக பிரதி பொலிஸ்மா அதிபர் புஸ்ஸெல்லவின் தலைமையில் குழுவொன்றை அமைத்தல்.
இந்தியாவில் 580 இலங்கை மாணவர்கள் தங்கியுள்ள நிலையில், படிப்படியர்கு ஏனைய நாடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தொழில்சாரர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவால் விசேட இணையத்தளம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொழும்புக்கு மாத்திரம் கிடைத்துள்ள உரத் தொகையை விரைவில் நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுத்தல்.
தேசிய விதை உற்பத்தியை அதிகரிக்க, அத்தியாவசிய விதைகளை இறக்குமதி செய்தல் மற்றும் எத்ர்காலத்தில் தேசிய உற்பத்திதுறையின் பங்களிப்பை 8 சதவீதத்திலிருந்து 12, 13 சதவீதமாக அதிகரித்தல்
தேயிலை ஏல விற்பனைக்கு கிடைத்த வெற்றிகரமான பெறுபேறாக 2.3 பில்லியனை தேயிலை சபை பெற்றுள்ளதென்றும் அதேப்போல் தேங்காய்க்கு நல்ல கேள்வி இருப்பதால் பாம் எண்ணெயின் இறக்குமதி குறைவடைந்துள்ளது.
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள நிவாரண திட்டத்தின் கீழ், 2,540.000 சமுர்த்தி பயனாளிகளுக்கு 5,000 ருபாய் வழங்கப்பட்டுள்ளதுடன், ஏனைய 1,511,000 பயனாளிகளுக்கம் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய 6 மில்லியன் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய விவசாயிகளின் உற்பத்திகளுக்கு நியாய விலையைப் பெற்றுக் கொடுத்தல்
தேசிய விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக விவசாயிகளின் பொருளாதாரத்தை பலப்படுத்த எதிர்வரும் பெரும்போகத்தில் பிரதான 14 உற்பத்திகளுக்காக உத்தரவாத விலையை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விலையின் கீழ் சந்தைகளில் கொள்வனவு செய்ய முடியாவிட்டால் அரசாங்கம் தலையிட்டு குறித்த உத்தரவாத விலைக்கு விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுக்கும்
அரசாங்கத்தால் புதிதாக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ள 54,000 பட்டதாரிகளுக்கு உரிய கொடுப்பனவு இதுவரை காலமும் கிடைக்காதிருந்தால், அதனை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கவும்
மக்கள் தொடர்பாடல் துறைகளின் கீழ் ஊடகவியலாளர்கள், சங்கீதம், நடனத்துறை உள்ளிட்ட துறைசார்ந்தவர்களுக்கு விசேட கடன் திட்டத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தல்
2020 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில், தேசிய சுற்றுலா பிரதிநிதிகளிடம் அறவிடப்பட்ட மேலாண்மை மதிப்பு வரியை விடுவித்தல்
சிறிய மற்றும் நடுத்தர அரிச ஆலை உரிமையாளர்களுக்கு விரைவு கடன் திட்டம்
இறக்குமதியை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் நிறுவனங்களின் சுகாதார பாதுகாப்பு உற்பத்தி, விநியோகம், நிதியுதவிகளை வழங்குவதற்கு விசேட அமைச்சரவைப் பத்திரம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ மத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் நோர்வே அபிடர் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கிடையிலான ஒப்பந்தத்தை நீட்டித்தல்.
மின்சக்தி அமைச்சுக்கு சொந்தமான முத்துராஜவல நீர் கட்டமைப்பை முழுமையாக புதுப்பிப்பதற்கு தேவையான மேலதிக பொருள்கள் கொள்வனவுக்கு அமைசச்ரவை அனுமதி
லுணுகம்வெஹரயில் யானைகள் காப்பக மத்திய நிலையத்தை அமைத்தல்.
ஸ்ரீ லங்கா விமான நிறுவனத்தில் புதுப்பித்தல் நடவடிக்கைகள் தொடர்பான ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளதென அமைச்சரவை இணைபேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
2 hours ago