Editorial / 2019 மே 05 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குமாறு, ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் யோசனை ஒன்றை முன்வைப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையிலான கடிதங்களுடன் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் அலுவலக பணியாளர்கள் பொலிஸாரல் கைதுசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாம் நினைக்கவில்லை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதியின் முதுகில் கத்தியால் குத்துவார்கள் என்று எனத் தெரிவித்துள்ள மஹிந்த அமரவீர, எனவே லக்ஷ்மன் கிரியெல்லவை பதவி நீக்குவதற்கான யோசனையை பிரதமர் ஜனாதிபதியிடம் உடனடியாக முன்வைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அமைச்சரவையில் இவ்வாறான ஒருவரை வைத்திருக்க வேண்டாம் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025