2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

அம்பலாங்கொடை பிரதேசத்தில் கைக்குண்டுகள் மீட்பு

Editorial   / 2018 டிசெம்பர் 30 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாங்கொடை – ஹரேவத்த – உஸ்வெல்ல பிரதேசத்தில் கடற்கரைக்கு அண்மித்த பகுதியிலிருந்து கைக்குண்டுகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பலாங்கொடை பொலிஸாருக்கு நேற்று (29) கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், அங்கு காணப்பட்ட எஸ்.எப்.ஜீ ரக கைக்குண்டுகள் இரண்டை மீட்டதாகத் தெரிவித்தனர்.

அத்தோடு, குறித்த இரு கைக்குண்டுகளையும் இன்று (30) பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .