2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அமைச்சர் இணங்கியதால் 21 நாட்கள் போராட்டம் நிறைவு

Kogilavani   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

21 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம், நேற்றுச் செவ்வாய்க்கிழமையுடன், தனது போராட்டத்தை முடித்துக்கொண்டது.

இந்நிலையில், இன்று புதன்கிழமை (28) முதல், அரச சேவை தொழில் அதிகாரிகள் அனைவரும், சேவையில் ஈடுபடுவார்கள் என, அச்சங்கம் தெரிவித்தது.

தொழில் உறவுகள் சேவைத் திருத்தச் சட்டமூலத்துக்கு, அமைச்சரவை அனுமதியினைப் பெற்றுக்கொள்வதற்கான அமைச்சரவைப் பத்திரம், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டீ.ஜே.செனவிரத்னவினால், நேற்றுச் செவ்வாய்க்கிழமை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தொழில் உறவுகள் சேவைத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில், எதிர்வரும் மூன்று மாதக் காலப்பகுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் செனவிரத்ன உறுதியளித்ததாக, சங்கம் தெரிவித்தது.

இதற்கமையவே, தங்களது போராட்டத்தை முடித்துக்கொண்டு, நாளை (இன்று) முதல், அரச சேவை தொழில் அதிகாரிகள் அனைவரும், சேவைக்குத் திரும்புவார்கள் என்று, அச்சங்கம் மேலும் கூறியது.

தொழில் அதிகாரிகளின் பணி அத்தியாவசிய சேவைக்குள் உள்ளடக்கி வர்த்தமானியில் அறிவிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதிலுமுள்ள 379 அதிகாரிகள், போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இந்த தொழில் அதிகாரிகளின் தொழிற்சங்கப் போராட்டத்தினால், 23,000 தொழில் வழக்கு விசாரணைகள், ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .