2025 மே 17, சனிக்கிழமை

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இன்று விசேட பிரேரணை

Gavitha   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைக்கவுள்ள தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரித்துகொள்வதற்காக நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது.

இந்த பிரரேரணையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை முன்வைப்பார் என்று அறியமுடிகின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் பிரகாரமே இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 45ஆகவும், அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் எண்ணிக்கை 55ஆகவும் அதிகரிக்கும்.

இவ்வாரண பிரேரணையொன்று கொண்டுவரப்படவேண்டுமாயின் அந்த பிரேரணை புதிய அரசாங்கத்தின் கன்னி நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் கொண்டுவந்து நிறைவேற்றப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .