2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அமைச்சரை தூசனத்தில் ஏசியவருக்கு பிணை: வீடும் கிடைத்தது

Kanagaraj   / 2015 நவம்பர் 20 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சர் பழனி திகாரம்பரத்தின் அலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி அவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மட்டுமன்றி, அவரை தூசனத்தால் ஏசியவரை அமைச்சர் மன்னித்துள்ளார்.

பெருந்தன்மையுடன் மன்னித்தது மட்டுமன்றி அவருக்கு வீடொன்றையும் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சர் இணங்கியுள்ளார்.

தன்னுடைய அலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய மீரியபெத்தையைச் சேர்ந்த நபரொருவர், தனக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அமைச்சர் பி.திகாம்பரம், கொஹுவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், மீரியபெத்தை மண்சரிவில் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த நபரொருவரை பொலிஸார் அண்மையில் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், கொஹுவளை பொலிஸ் நிலையத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை சென்றிருந்த அமைச்சர் திகாம்பர், அந்த நபருக்கு மன்னிப்பு வழங்கியதுடன், வீடொன்றையும் பெற்றுதருவதற்கு உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த நபர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .