Editorial / 2026 மே 10 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தின் தேவைகளை நிறைவேற்றத் தவறினால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஹிரியால பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
"தற்போது நாட்டில் நபர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். சட்டம் வளைக்கப்படுகின்றது; அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமக்குச் சாதகமான வாக்குமூலங்களை எழுதி வாங்குவதற்கு முயற்சிகள் நடக்கின்றன. அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்க மறுப்பவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.
எமக்கு எட்டிய தூரம் வரை எந்தத் தேர்தலும் தென்படவில்லை. தேர்தல் எப்போது நடைபெறும் என்பதும் எமக்குத் தெரியாது. இருப்பினும், இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் எமது கட்சியைச் சுற்றி ஒன்றிணைந்து வருகின்றனர்," என்றார்.
50 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
51 minute ago