Janu / 2026 ஏப்ரல் 27 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், இளவாலைப் பகுதியில் நிலத் தகராறு ஒன்றின் போது பெண் ஒருவரைத் துப்பாக்கியால் மிரட்டியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக, வாக்குமூலம் அளிப்பதற்காக திங்கட்கிழமை (27) அன்று காலை இளவாலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த போதே அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியைப் பொலிஸார் பொறுப்பேற்றனர். பின்னர் அவர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் மாலை ஆஜர்படுத்தப்பட்டார்.
மனுவைப் பரிசீலித்த மல்லாகம் நீதிவான் நீதிமன்றம், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை ஏப்ரல் 29-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
இராமநாதன் அர்ச்சுனாவால் மிரட்டப்பட்டதாகக் கூறப்படும் இரு நபர்களில் ஒருவர் ஏற்கனவே ஏப்ரல் 29-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மற்றொரு நபர் காயமடைந்த நிலையில் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

9 minute ago
24 minute ago
34 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
34 minute ago
45 minute ago