Editorial / 2026 ஏப்ரல் 19 , மு.ப. 11:13 - 0 - {{hitsCtrl.values.hits}}

செல்வநாயகம் கபிலன்
"அரசியல் வாழ்வில் சவால்கள் சகஜமானவை. அந்த வகையில், எதிர்காலத்தில் அரசியல் ரீதியான கைதுகள் கூட இடம்பெறலாம். அவ்வாறான சூழல் ஏற்பட்டாலும் கட்சியின் செயற்பாடுகளை வீரியமுடன் முன்னெடுத்துச் செல்வதற்கு கட்சி உறுப்பினர்கள் தயாராக இருக்க வேண்டும்" என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். யாழ் - கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், நிர்வாக மற்றும் உதவி நிர்வாக செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்:
"கடந்தகால சேவைகள் மற்றும் அரசியல் நகர்வுகளின் அடிப்படையில், சமகால அரசியல் களத்தில் ஈ.பி.டி.பியின் தேவை அதிகமாக உணரப்படுகின்றது. இதனை மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்துகின்றன.
அதேவேளை, கட்சியின் கொள்கையை நேர்த்தியாகவும் வெளிப்படையாகவும் முன்னெடுத்துச் செல்ல உழைக்கும் எவரும் கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியும். கட்சியின் அடுத்தகட்டத் தலைமையை கட்டியெழுப்பும் முயற்சிகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கட்சி நலனும் கட்சியின் செயற்பாடுகளுமே ஒவ்வொருவரினதும் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். அதன் ஊடாகவே மக்களின் எதிர்காலத்தையும் அபிலாசைகளையும் வெற்றிகொள்ள முடியும்," என்றார்.
58 minute ago
58 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
58 minute ago
2 hours ago