Editorial / 2019 செப்டெம்பர் 15 , பி.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் தோல்வியடைவதற்கு தயாராகியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிகாரம் கைநழுவி போகும் என்ற அச்சத்தில் அரசாங்கம் பின்வாங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொஸ்கம பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வௌியிடுகையில் அவர் இன்று (15) இதனைக் கூறியுள்ளார்.
தமக்கும் நாட்டுக்கும் ஏற்படும் நன்மைகளை மாத்திரமே நாட்டு மக்கள் கருத்தில் கொள்வார்கள் என்றும், அதனைவிடுத்து மற்றவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் தேர்தலில் களமிறங்கிய சந்தர்ப்பத்தில் பல விதமா கருத்துக்களை முன்வைத்தனர். எனினும் அதனை தாண்டி அவர்கள் வெற்றிப்பெற்றதாகவும் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026