2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘அரசியல் சேறு பூசல்களால் போலி பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன’

Editorial   / 2019 பெப்ரவரி 11 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் சேறு பூசல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, சில அரசியல்வாதிகளுக்கும் பாதாளக் குழுவினருக்கும்  தொடர்பிருப்பதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படக் கூடாதென, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த சேறு பூசும் நடவடிக்கையால் அரசியல்வாதிகள் மட்டுமல்ல சில அதிகாரிகளும் பாதிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு அரசாங்கத்திலும் சில அரசியல் தலைவர்கள் பாதாளக் குழு தலைவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தது இரகசியமான விடயமல்ல எனத் தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் தற்போது  பேசாமல் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால், அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .