Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
S.Renuka / 2025 மே 22 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்க வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகத்தில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுப்பதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும் இலக்காகக் கொண்ட புதிய டிஜிட்டல் எரிபொருள் அட்டை முறையை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையின் கீழ் இந்த முறைமை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுவரை அரச நிறுவனங்களின் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும்போது கூப்பன் முறைமையே காணப்பட்டதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், டாக்டர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார்.
குறித்த கூப்பனுக்கு பதிலாக தற்போது டிஜிட்டல் அட்டை முறைமையை அறிமுகப்படுத்தற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த டிஜிட்டல் அட்டை மூலம் அனைத்து எரிபொருள் விநியோக நிலையங்களிலும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
22 minute ago