2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரச அதிகாரிகளை விமர்சிப்போருக்கெதிரான நடவடிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 08 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரட்ணவின் வழிநடத்தில், இலங்கை பொலிஸின் ஊடகப் பிரிவால் இம்மாதம் முதலாம் திகதி வெளியிடப்பட்ட அறிவித்தலில், அரச அதிகாரிகளை விமர்சிப்போருக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்பது, கருத்துச் சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக, சிவில் சமூகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில், விக்ரமரட்ணவுக்கு சிவில் சமூகத்தால் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதமொன்றுல் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு பிரதியிடப்பட்டுள்ள இக்கடிதத்தில், அரச அதிகாரிகளின் நடவடிக்கையின்மையைக் கேள்விக்குட்படுத்துவது ஒவ்வொரு பிரஜையினதும் சிவில் உரிமை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தவிர, அரசாங்கத்தை விமர்சிப்போரைக் கைது செய்ய அதிகாரமளிக்கும் எந்தச் சரத்தும் சட்டத்தில் இல்லை எனக, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளடதுடன், குறித்த அறிவுறுத்தலைத் திருத்துமாறும் இக்கடிதத்தினூடாகக் கோரப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .