2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘அரச அதிகாரிகள் பயமுறுத்தப்படுகின்றனர்’

ஆர்.மகேஸ்வரி   / 2018 டிசெம்பர் 10 , பி.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எமது நாட்டில் நேர்மையாக பணியாற்றும் அரச பணியாளர்களை சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் வீணாக பயமுறுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இன்று (10) ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர்,

மஹிந்த ராஜபக்‌ஷவின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஐவரை நாடாளுமன்ற சிறப்புக்குழு, நிதி குழு மற்றும் பொது கணக்காய்வு குழு ஆகியவற்றுக்கு  அழைத்து விசாரணை செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமையின் மூலம் அரச அதிகாரிகளை யார் அச்சுறுத்துவது என்று புலனாகியுள்ளதாக தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .