Janu / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல அரிசி வர்த்தகர் மித்ரபால லங்கேஷ்வரவுக்கு சொந்தமான, வெலிகந்த - சிங்கபுர பகுதியில் அமைந்துள்ள அரிசி ஆலை வளாகத்தில் செவ்வாய்க்கிழமை (24) அன்று பிற்பகல் 2.30 மணியளவில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தீயணைப்புப் பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து தீயை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரிசி உமி சேகரிக்கப்பட்டிருந்த பகுதியிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக அரிசி ஆலையின் ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மித்ரபால லங்கேஷ்வரவிடம் தொலைபேசி ஊடாக வினவியபோது, சிறிய அறையொன்றில் மின்கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் பெரிய பாதிப்புகள் ஏதுமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .