Editorial / 2026 ஜனவரி 13 , பி.ப. 02:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

அரச ஊழியர்களுக்கு பண்டிகை முற்பணம் தொடர்பான தாபன விதிக்கோவை ஏற்பாடுகளுக்கமைய, ஊழியர் ஒருவருக்கு தைப்பொங்கல், ரமழான், சிங்கள -தமிழ் புத்தாண்டு, வெசாக், தீபாவளி மற்றும் நத்தார் போன்ற பண்டிகைகளுக்கும் யாத்திரிகப் பயணங்களுக்கும் (சிவனொளிபாத மலை தரிசனம் மற்றும் ஹஜ் கடமை போன்ற முற்பணமாக 10,000/- ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமை உண்டு.
குறித்த முற்பணம் வட்டியின்றி 08 மாதத் தவணைகளாக அல்லது அதற்கு முன்னரோ அறவிடுவதற்கான ஏற்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
அப்பண்டிகை முற்பணத்தை 15,000/- ரூபாவாக அதிகரித்து வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கமைய, அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்கொடுபணத்தை 15,000/- ரூபாவாக அதிகரிப்பதற்கு இயலுமாகும் வகையில் தாபன விதிக்கோவையின் உரிய ஏற்பாட்டை திருத்தம் செய்வதற்கும், அதுதொடர்பாக சுற்றறிக்கை ஆலோசனைகளை வெளிவிடுவதற்கும் பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
56 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago