Freelancer / 2025 ஓகஸ்ட் 06 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் அதனைப் பாதுகாப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில், பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக 11 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். (a)
37 minute ago
40 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
40 minute ago
58 minute ago
1 hours ago