2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

அரச கௌரவத்துடன் மாலினி பொன்சேகாவின் இறுதி நிகழ்வு

Freelancer   / 2025 மே 25 , மு.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த புகழ்  பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதி சடங்குகள் நாளை திங்கள் கிழமை சுதந்திர சதுக்கத்தில் அரச கௌரவத்துடன் நடைபெற உள்ளன என ஜனாதிபதி ஊடகப்பிரிவு  அறிவித்துள்ளது.

இலங்கைத் சினிமாவின் ராணி என்ற அந்தஸ்த்து பெற்ற மறைந்த மாலானி பொன்சேகாவின் இறுதிச் சடங்குகளுக்கான வசதிகளை வழங்குவது  தொடர்பிலான கலந்துரையாடல் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

மாலனி பொன்சேகாவின் பூதஉடல் இன்று தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தரங்கனி மண்டபத்திலும், நாளை சுதந்திர சதுக்க மாளிகையிலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதிச் சடங்குகள் நாளை திங்கள் கிழமை பிற்பகல் சுதந்திர சதுக்க வளாகத்தில் அரச கௌரவத்துடன் நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாலனி பொன்சேகாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த நாடு முழுவதிலுமிருந்து வரும் மக்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நீண்ட கலந்துரையாடலும் இதன்போது நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எஸ். ஆலோக பண்டார, புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரின்ஸ் சேனாதீர, மாலனி பொன்சேகாவின் உறவினர்கள், கலைஞர்கள் மற்றும் பலர் கொண்டனர். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X