Editorial / 2019 ஓகஸ்ட் 17 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டுமெனவும். பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அரச சேவையாளர்களும் சிறந்த மன நிறைவுடன் சேவையில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதே தமது எதிர்பார்ப்பாகுமெனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்..
பொலிஸ் அதிகாரிகளுக்கான நலனோன்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் திருமணமாகாத படையினருக்காக மருதானையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டுத்தொகுதியை, நேற்று (16) திறந்து வைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், ஜனாதிபதி, சகல அரச அதிகாரிகளும் தமது அலுவலகக் கடமைகளில் மாத்திரமன்றி தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகொள்வதற்கு தேவையான வசதிகளையும் வழங்குவதனூடாக உயர்ந்தபட்ச, வினைத்திறனான சேவையை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.
பொலிஸ் திணைக்களத்தின் கீழ் மட்ட உத்தியோகத்தர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பல நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அவர்களது பதவியுயர்வு, கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இதற்காக பெருமளவிலானோர் தகுதி பெற்றுள்ளமையால் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கு சிரமமாக இருந்தபோதிலும் மூன்று பிரிவுகளின் கீழ் அப்பிரச்சினைகளை துரிதமாக தீர்த்து வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago