2025 ஜூலை 05, சனிக்கிழமை

‘அரச தொழிலைப் பெறுவோர் சமுர்த்தியை இழப்பர்’

Editorial   / 2019 டிசெம்பர் 30 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

குறைந்த  வருமானம் பெறும் குடும்பங்களில் உள்ளவர்களுக்கு,  அரச தொழில் வாய்ப்புகள் பெற்றுக்கொடுக்கப்படும் எனத் தெரிவித்த  முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம,  அவ்வாறான குடும்பங்களுக்கு  சமுர்த்தி வழங்கப்படாதெனவும் தெரிவித்தார்.

ஆளும் கட்சியிலுள்ள  நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு,  20 மில்லியன் ரூபாய் வீதம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதனைக் கொண்டு அவர்களின் தொகுதிகளிலுள்ள பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறு,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ளாரெனவும் தெரிவித்தார். 

அத்துடன்,  குறைந்த  வருமானத்தை  ஈட்டுவதால், சமுர்த்தி பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 700 பேர் அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்றார். 

கல்வித் தகைமையை கருத்திற்கொள்ளாது, அவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுவதுடன், ஓய்வூதிய சலுகையும் வழங்கப்படுமெனத்  தெரிவித்த அவர்,  அரச ​​தொழில் வாய்ப்பை பெறும் குடும்பங்களுக்கு சமுர்த்தி வழங்கப்படாது என்றார்.

மேலும், நாட்டிலுள்ள சகல பிரதேசங்களுக்கும்  2 பில்லியன் வீதம் வழங்கி,  அடிப்படை  பிரச்சினைகளைத்  தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் மேலும்  தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .