2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

அரச நிறுவனங்களுக்குக் காலக்கெடு

Nirosh   / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று மாதங்களுக்கு மேல் நீர் கட்டணத்தை செலுத்தாத அரச நிறுவனங்களிடமிருந்து 2.5 சதவீத கட்டணத்தை அறவிடுவதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

கட்டணங்களை செலுத்துவதற்கு காலந்தாழ்த்தும் அரச நிறுவனங்களிடமிருந்து இதற்கு முன்னர் கட்டணங்கள் எதுவும் அறவிடப்படவில்லை. இதேவேளை நீர் கட்டணத்தை இரு மாதங்களுக்கு மேல் செலுத்தாத மேயர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களின் நீர் விநியோகச் செயற்பாடுகளை துண்டிப்பதற்கு எதிர்காலத்தில் தீர்மானிக்கப்பட உள்ளது.

நீர் கட்டணங்களை செலுத்தத் தவறியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் நீர் கட்டணங்களை செலுத்த வேண்டுமென சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

13 மில்லியன் ரூபாய் நீர்கட்டணத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இதுவரையில் செலுத்தவில்லை என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .