2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

அரசியலமைப்புப் பேரவை: 6 உபகுழுக்களில் 22 பேர் சிறுபான்மைப் பிரதிநிதிகள்

Princiya Dixci   / 2016 மே 06 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

அரசியலமைப்புச் சபையின் ஆறு உபகுழுக்களுக்கான பிரதிநிதிகள், நேற்று வியாழக்கிழமை (05) நியமிக்கப்பட்டனர். அப்பிரதிநிதிகளுக்கு பேரவை ஏகமனதாக அங்கிகாரமளித்தது.

அரசியலமைப்புப் பேரவையின் இரண்டாவது கூட்டம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்றுக் காலை 9.30க்குக் கூடியது. 

பேரவையின் முதலாவது கூட்டம், மே மாதம் 2ஆம் திகதி கூடியது. அப்போது, 21 பேரடங்கிய வழிப்படுத்தல் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் கூட்டம், சுமார் 10 நிமிடங்கள் மட்டுமே கூடியது. மொத்தம் 66 பேரடங்கிய இந்தக் குழுக்களில் சிறுபான்மைப் பிரதிநிதிகள் 22 பேர் அங்கம் வகிக்கின்றனர்.அடிப்படை உரிமை, நீதித்துறை, நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுச் சேவைகள், மத்திய மற்றும் வெளி எல்லைகள் ஆகிய ஆறு குழுக்களுக்கான பிரதிநிதிகளே நியமிக்கப்பட்டனர். 

அவர்களின் பெயர்களை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, பிரேரிக்க பேரவை அங்கிகாரமளித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X