Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 பெப்ரவரி 10 , மு.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
உண்மையான நல்லிணக்கம், விசுவாசமாக ஏற்படவேண்டுமாயின், நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு அவசியமானது என்பதை, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனிடம்
வலியுறுத்தினோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்
எம்.பி தெரிவித்தார்.
ஹுஸைனுக்கும், இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுவினருக்கும் இடையில், கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது.
சந்திப்புத் தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர், தொடர்ந்து தெரிவிக்கையில்,
உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைனை சந்தித்து நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தப்பேச்சுவார்த்தை திருப்திகரமானதாக இருந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில், நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக முறையாக அமுல்படுத்தவேண்டும் என்ற கருத்தை நாங்கள் முன்வைத்திருக்கின்றோம்.
நாட்டில் உள்ள தேசிய பிரச்சினை சம்பந்தமாகவும் ஏனை விடயங்கள் பற்றியும் எடுத்துரைத்தோம். காணிகள் விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோரின் விவகாரம் தொடர்பாகவும் ஆணையாளருடன் கலந்துரையாடினோம்.
அதேபோல, உண்மையான நல்லிணக்கம் விசுவாசமாக ஏற்படவேண்டுமாயின் ஒரு நிரந்தரமான நியாயமான அரசியல் தீர்வு தேவை என்பதனை வலியுறுத்தினோம் என்றும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று ஹுஸைன் தெரிவித்திருந்தமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,
அது ஒரு கருத்து. அவருடைய கருத்து, சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் அதனைச்செய்யமுடியாது என்பது அவருடைய கருத்து. பொதுமன்னிப்பின் ஊடாக, அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டிய தேவையில்லை. அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு வேறுபல ஒழுங்குகள் இருக்கின்றன என்றார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago