S.Renuka / 2025 டிசெம்பர் 03 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

நாட்டை பாதித்த சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகம்கொடுத்தவராக்களை மீட்கும் பணிகளிலும் அவர்களுக்கான அத்தியாவசிய பொருள்கள், உணவு மற்றும் நிவாரணங்களை விநியோகிக்கும் பணிகளில் இலங்கை விமானப்படையினர் மேற்கொள்கின்றனர்.
இலங்கை விமானப்படையினர் வான்வழி மீட்பு செயற்பாடுகள் மட்டுமல்லாமல் தரைவழி மீட்பணிகளிலும் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர் வெள்ளத்தில் சிக்குண்டவர்கள் நோயாளிகள் மற்றும் காயமுற்றவர்கள் போன்றோரை கொண்டும் செல்லுதல் அடங்கலாக அத்தியாவசி பொருட்கள் மற்றும் வைத்திய உபகரணங்கள் உணவுப்பொருட்கள் போன்றவற்றை விநியோகிக்கும் பணிகளில் விமானப்படை விமானங்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதோடு மட்டுமல்லாமல் தரைவழி மீட்பு பணிகளிகளிலும் நாடுமுழுவதும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர் இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவி மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகித்தல் , அனர்த்தத்திலபாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பான இடத்திற்கும் கொண்டு செல்லுதல் போன்ற பணிகளில் விமானப்படையின் 2,000 த்திற்கும் அதிகமான விசேட ரெஜிமென்ட் படைப்பிரிவினரும் மற்றும் மீட்புக்குழுவினரும் செயற்பட்டுவருகின்றனர்.
மேலும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), பிரிவுடன் இணைந்து கொச்சிக்கடை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கிவர்களை மீட்பதோடு பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணகளையும் விநியோகிக்கும் பணிகளில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
Previous article: ஜா-எல பிரதேசத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை மற்றும் இந்திய விமானப்படை வைத்திய குழுவினரின் விசேட மருத்துவ முகாம்Prev
10 minute ago
16 minute ago
17 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
17 minute ago
20 minute ago