2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அரிசி ஆலைகளை தொடர்ந்து திறந்துவைக்கத் தீர்மானம்

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரிசிக்கான தட்டுப்பாடைத் தடுக்கும் நோக்கில், உற்பத்தி நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்காகவும் பிரதான அரிசி ஆலைகளை மூடாமல் தொடர்ச்சியாகத் திறந்து வைக்கவும், அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில், நேற்று (09) நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றின் போதே, இவ்விடயம் தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நாட்டின் தற்போதைய நிலையில், மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

தற்போது மக்களுக்குத் தேவையான அரிசி எவ்விதத் தட்டுப்பாடுமின்றியக் காணப்படுவதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும், நாட்டுக்குள் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், பற்றாக்குறையின்றி அரிசி உற்பத்தியை முன்னெடுப்பதற்காக, அரிசி ஆலைகளை அத்தியாவசியச் சேவையாக அறிவிக்க வேண்டும் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மீன்பிடித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் குறித்தும் பிரதமர், ஜனாதிபதியால் அவதானம் செலுத்தப்பட்டதுடன், மீனவச் சமூகத்துடன் கலந்துரையாடி, விரைவில் அந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு, நிதியமைச்சின் செயலாளருக்கு பிரதமரால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்கு உத்தரவால் சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாதிருக்கும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப்பொருள்களை விநியோகிப்பதற்கும் இதன்போது கலந்துரையாடப்பட்டதென, பிரதமரின் ஊடகப் பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .