2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

அரை நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட 2 பெண்கள்

Freelancer   / 2023 ஜூலை 22 , பி.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் உள்ள பகுவாஹாட் மார்க்கெட் பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 2 பெண்கள் நின்றிருந்தனர். 

அப்போது அந்த 2 பெண்களும் திருடியதாக கூறியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த பெண் வியாபாரிகள் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். மேலும் ஏராளமானவர்கள் சுற்றியிருக்க 2 பெண்களின் ஆடைகளை கிழித்து அரைநிர்வாணப்படுத்தி இழுத்து சென்றனர். 

இந்த வீடியோ தான் தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதுபற்றி போலீசார் இன்னும் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுபற்றி போலீசார் கூறுகையில், 

‛‛சம்பவம் தொடர்பாக எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை. வீடியோ வெளியான பிறகு தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் இரு பெண்களும் திருடி சிக்கியதால் மற்ற பெண் வியாபாரிகள் தாக்கி உள்ளனர். 

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட 2 பெண்கள் மற்றும் பெண் வியாபாரிகள் தரப்பில் இருந்து எந்த புகாரும் வரவில்லை'' என தெரிவித்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X