2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

அளுத்கமகேவுக்கு நீடிப்பு: பசிலுக்கு ஒத்திவைப்பு

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 22 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு 7, கறுவாத்தோட்டம் பகுதியில், 27 மில்லியன் ரூபாய்க்கு வீடொன்றைக் கொள்வனவு செய்தாரென, நிதிச் சலவைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் விளையாட்டுத்துறை முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேயை, எதிர்வரும் 27ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய, நேற்று வியாழக்கிழமை (22) உத்தரவிட்டார்.

இதேவேளை, பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் மல்வானை பிரதேசத்திலமைந்துள்ள காணியொன்று தொடர்பில் இடம்பெற்றுவரும் வழக்கின் விசாரணை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதிக்கு பூகொட மாவட்ட நீதவான் சஞ்ஜீவ சோமரத்னவினால், நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

குறித்த காணி தொடர்பான சட்டச்சிக்கல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு, பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ள பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்கு, நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .