2024 செப்டெம்பர் 14, சனிக்கிழமை

அவகாசம் முடிந்தது: வேலைநிறுத்தம் தொடர்கிறது

Editorial   / 2024 ஜூலை 10 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் உரிய புகையிரத நிலையத்திற்கோ அல்லது அருகில் உள்ள புகையிரத நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறு ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்துள்ளார்.

கட்டளைக்கு இணங்காத அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சேவையை விட்டு வெளியேறியதாக கருதப்படும் என்று அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்படுவதாக   முதலிகே கூறினார்.

இதேவேளை, தங்களால் முன்னெடுக்கப்படும் ​வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .