Editorial / 2019 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி தொடக்கம் நடைமுறையில் இருந்து வந்த அவசரகாலச்சட்டம் நேற்றுடன் காலாவதியாகியுள்ளது.
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை அடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
பின்னர், நாடாளுமன்ற ஒப்புதலுடன், அவசரகாலச்சட்டத்தை, ஜனாதிபதி தொடர்ந்து நீடிப்பு செய்து வந்தார்.
இந்த நிலையில், அவசரகாலச்சட்டத்தை நீடித்து கடந்த ஜூலை 22ஆம் திகதி வெளியான வர்த்தமானி நேற்றுடன் காலாவதியானது.
தொடர்ந்து அவசரகாலச்சட்டத்தை நீடிப்புச் செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
இதனால் அவசரகாலச்சட்டம் இனி நீடிக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது தொடர்பான உத்தியோப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
59 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
1 hours ago