Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 19 , மு.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மற்றம் நிர்க்கதியாகியுள்ள அனைவருக்கும், நாடாளுமன்றம் சார்பாக அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இந்த அனர்த்த விடயத்தில் முழு நாடாளுமன்றமும் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. சபாநாயகரின் அறிவிப்பின் போதே அவர் மேற்கண்டவாறு அறிவித்தார். நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவிய அசாதாரண வானிலையினால் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களினால் பலர் உயிரிழந்தும் இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். இந்த அனர்த்த பாதிப்புகளை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவதுடன் இந்த விடயத்தில் முழு நாடாளுமன்றமும் கவனம் செலுத்தியுள்ளது.
அத்துடன் மரணமடைந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் நாடாளுமன்றத்தின் சார்பாக அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றேன் என்றும் கூறினார்.
விஜித ஹேரத் எம்.பி
இயற்கை அனர்த்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, சபாநாயகர் கரு ஜயசூரியவினால் விடுக்கப்பட்ட அறிவிப்புத் தொடர்பில் கருத்துரைத்தபோதே ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் எம்.பியுமான விஜித ஹேரத், நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையைக் கவனத்தில் கொண்டு, அவசர அனர்த்த நிலைமையைப் பிரகடனப்படுத்துமாறு கோரி நின்றார்.
'இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்த, பாதிக்கப்பட்டோர் மற்றும் நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளோர் தொடர்பில் நாமும் எங்களுடைய அவதானத்தை செலுத்துகின்றோம்.
பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவுகின்ற போது „சுற்றறிக்கை... இடையூறாக இருக்கின்றது. நலன்புரி நிலையங்களில் இருக்கின்ற மக்களுக்கு மட்டுமே உணவுகளை விநியோகிக்க முடியும். இதனால், சிற்சில பிரச்சினைகள் எழுகின்றன. ஆகையால், சுற்றறிக்கைக்கு அப்பால் சென்று சேவையாற்றும் வகையில் அவசர அனர்த்த நிலைமையை பிரகடனப்படுத்துங்கள்' எனக் கோரி நின்றார்.
இதனிடையே எழுந்த அவை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, இந்தக் கோரிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தும்' என்றார்.
பாதித்தோரை நல்லாட்சி கைவிடாது
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரையும், தாய்நாட்டுப் பிரஜைகள் ஒவ்வொருவரையும், நல்லாட்சி அரசாங்கம் கைவிடாது என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 'இயற்கை அனர்த்தங்களினால் முழுமையாகவும் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை காலவரையரையின்றிக் கட்டிக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவும், பாதுகாப்பான இடங்களில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.
அதுமட்டுமன்றி, உட்கட்டமைப்பு, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும். அதுமட்டுமன்றி பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்;தை கட்டியெழுப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பாதிக்கப்பட்டுள்ள மக்களை நல்லாட்சி அரசாங்கம் கைவிடாது. தாய்நாட்டுப் பிரஜைகளை கைவிடாது' என்றும் அவர் கூறினார்.
ஹெலியில் சென்று பிரதமர் பார்வை
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஹெலியில் சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இயற்கை அனர்த்தங்களை வானிலிருந்து நேற்று புதன்கிழமை பார்வையிட்டார்.
இயற்கை அனர்த்தங்களை பார்வையிட்டதன் பின்னர், நாடாளுமன்றத்துக்கு நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு, ஹெலியிலேயே வருகை தந்தார். அவைக்கு வருகை தந்த பிரதமர், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை, பிரேரணை மீதான இரண்டாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'இயற்கை அனர்த்தங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களை நானும், அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் ஹெலிகொப்டரில் சென்று ஆகாயத்தில் இருந்து அவதானித்தோம்.
கம்பஹா மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. நிலங்கள், வெள்ள நீரினால் நிரம்பியுள்ளன. கடுகண்ணாவையை பொறுத்தவரையில், அங்கு ஏற்பட்டிருக்கும் அனர்த்தம் அதிகமாகும்.
அங்கு ஏற்பட்டுள்ள மண்சரிவில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கும் இராணுவமும், விசேட அதிரடிப்படையினரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு இத்தருணத்தில் அரசாங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துகொள்வதுடன் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இன்று (நேற்று), படைவீரர்கள் தினமாகும், இவ்வாறானதொரு தினத்தன்று படையினர், உயிர்களைக் காப்பாற்றி கொண்டிருக்கின்றனர்.
உயிர்களைக் காப்பாற்றுவதே உண்மையான படைவீரர்கள் தினமாகும். அரநாயக்கவிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறிய அவர், மண்சரிவுகள் ஏற்படுவதைத் தடுக்க முடியாது. ஆனால், தடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் முன்கூட்டியே ஆராய்ந்து ஒரு முடிவை எடுத்து அதனை நீண்டகால செயற்றிட்டமாக குறைக்கலாம்' என்றார்.
நிதி போதாது என்கிறார் வீரவன்ச எம்.பி
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சபாநாயகருடன் இணைந்து நாமும் அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்' என்று தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம். பியுமான விமல் வீரவன்ச, அனர்த்தங்களுக்கு பின்னரான நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது என்று சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்றுப் புதன்கிழமை, சபாநாயகர் விடுத்த அறிவிப்புத் தொடர்பில் கருத்து தெரிவித்து உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு, 150 மில்லியன் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது பிரதமருக்கு கார் வாங்குவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் நான்கில் ஒரு பங்காகும் என்பதுடன், மொத்த சனத்தொகையில் 2 சதவீதமான மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.
இதனிடையே எழுந்த சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜிவ சேனசிங்க, கடுவலையில் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை, நான் சென்று பார்த்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை வழங்கினோம். ஆனால், உறவினர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதற்கு 20 மில்லியன் ரூபாயை ஒதுக்கவில்லை' என்றார். இதனால் சபையில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
எனினும், குறுக்கிட்ட ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக்க, 'இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்குத் தேவையான அளவு நிதியை ஒதுக்குவதற்கு, ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது' என்றார். இதனையடுத்தே அந்த சலசலப்பு தணிந்தது.
1 hours ago
26 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
26 Aug 2025