2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

அவசர கூட்டத்துக்கு கிழக்கு முதலமைச்சர் அழைப்பு

Kanagaraj   / 2016 மே 30 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

இன்று திங்கட்கிழமை மாலை அவசரக் கூட்டமொன்றை நடத்துவதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட், அம் மாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலக மண்டபத்தில் இந்தக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட், கடற்படை அதிகாரியொருவக்கு ஏசிப்பேசியதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருவதாக மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .