2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

அவன்கார்ட் வழக்கு: நாளை தீர்ப்பு

Princiya Dixci   / 2016 நவம்பர் 24 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்கார்ட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஆயுதக் களஞ்சிமாக பயன்படுத்தப்பட்ட கப்பலை, விடுவிப்பதா? அல்லது உடைப்பதா? என்பது தொடர்பான தீர்ப்பு, நேற்றைய தினம் (23) அறிவிக்கப்படவிருந்த போதும் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், வழக்கு காரணமாக காலி துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் அவன்காட் கப்பல் தொடர்பிலான இறுதி தீர்ப்பை, நாளை வரை ஒத்திவைப்பதாக காலி பிரதான நீதவான் தெரிவித்துள்ளார்.

அவன்காட் நிறுவனம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள், கப்பலை பொறுப்பேற்க மறுத்துள்ளதை தொடர்ந்து, நீதவானால் இவ்வாறு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த கப்பல் ஒரு வருடமாக நங்கூரமிடப்பட்டுள்ளதால், இதனை பராமரிப்பதற்கு 77 மில்லியன் ரூபாய் வரையில் செலவாகி இருப்பதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .