2024 மே 18, சனிக்கிழமை

அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசி குறித்து விசேட அறிவித்தல்

Simrith   / 2024 மே 15 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்த உறைவு குறித்த கவலைகள் காரணமாக அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள் பெருமளவில் திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசியைப் பெற்ற நபர்கள் அதன் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று இலங்கை சுகாதார நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஊடகங்களுக்கு உரையாற்றிய தேசிய மருத்துவ மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம, தடுப்பூசியினால் ஏற்படும் சிக்கல்கள் மிகவும் அரிதானவை என்பதை AstraZeneca உற்பத்தியாளர் ஒப்புக்கொண்டதைக் சந்தர்ப்பத்தை குறிப்பிட்டார். 

இந்த அரிய சிக்கல்கள் எதிர்காலத்தில் ஏற்படும் பாதகமான விளைவுகளைக் குறிக்கவில்லை என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார், இது தடுப்பூசியின் ஒட்டுமொத்த பாதுகாப்பை உறுதி செய்கிறது என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .