S.Renuka / 2026 பெப்ரவரி 25 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தைய நாட்களுடன் ஒப்பிடும்போது, அரசாங்கம் வழங்கும் 'அஸ்வெசும' தவணை செலுத்தும் நாட்களில் மதுபான சாலைகளின் வருமானம் அதிகரித்து வருவதாக மலையகத்தில் பல பகுதிகளில் உள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தோட்டப்புறங்களில் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் இந்தப் போக்கு காணப்படுவதாகவும் மதுபான சாலைகளின் உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அஸ்வெசும பெறுநர்களில் பலர் குடும்பப் பொறுப்புகளைப் பற்றி கவலைப்படாமல் தங்களது அஸ்வெசும பணத்தை மதுபானத்தில் செலவிடுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும், அஸ்வெசும பெறுநர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் என்பதால், அவர்களின் வருமானத்தின் ஆதாரம் வணிகத்திற்கு முக்கியமற்றது என்பதுடன் அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்ய முடியாது என்று உரிமையாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
48 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago