Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 ஏப்ரல் 10 , பி.ப. 07:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்ற பெண் சிறப்பு மருத்துவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரரை பரிசோதனைக்காக ஆஜர்படுத்தி, தொடர்புடைய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இன்று உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று அனுராதபுரம் பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
எனவே, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய, சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .