2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

ஆசியாவை பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்க்கிறோம்

Freelancer   / 2023 மே 26 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்லரசு நாடுகளுக்கு இடையிலான தெரிவுக்கான அழுத்தத்துக்கு ஆசியா உடன்படாது என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஆசியான் நாடுகளும் சீனாவும்  ஒன்றையொன்று சார்ந்திருப்பதை எடுத்துக்காட்டியதுடன், ஆசியாவைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவுடன்   இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்திய ஜனாதிபதி பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்-    

டோக்கியோவில் நடைபெற்ற 'ஆசியாவின் எதிர்காலம் குறித்த நிக்கேய் மன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி உலக சனத்தொகையில் 60% சதவீதமானவர்களின் இல்லமாகவும், உலக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகின்ற உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாகவும் இருக்கும் ஆசியாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். 

சீனாவின் மீட்சி, இந்தியாவின் உள்நாட்டு கேள்வி, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற வளர்ந்த பொருளாதாரங்களின் பங்களிப்பின் உதவியால் பிராந்தியத்தில் தொடர்ச்சியான வளர்ச்சியின்  சாத்தியக்கூறுகளையும் அவர் எடுத்துரைத்தார்   

டோக்கியோவில் நடைபெறும் ஆசியாவின் எதிர்காலம் குறித்த நிக்கேய் மாநாட்டில் ஜனாதிபதி விக்ரமசிங்க ஆற்றிய உரையில், ஆசியா எதிர்கொள்ளும் மூன்று முக்கிய சவால்களை எடுத்துரைத்தார். 

ஜனநாயக விழுமியங்கள், மனித உரிமைகள், காலநிலை மாற்றம் வர்த்தக ஒருங்கிணைப்பு ஆகியவை முக்கிய சவால்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், ஆசிய நாடுகளில் உள்ள   மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு அரசியல் முறைகள் மற்றும் வரையறைகளை மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்  

நிக்கேய் உச்சிமாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி விக்ரமசிங்க, ஆசியா உலகளாவிய பொருளாதார சக்தியாகவும் மிகவும் ஆற்றல்மிக்க பிராந்தியமாகவும் மாறியுள்ளது என்றும், அதன் பொருளாதாரம் ஏற்கனவே ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கது என்றும் குறிப்பிட்டார்  

ஆசிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் ஆசிய நாடுகளின் வெப்பநிலை உயர்வு,கடுமையான  வானிலை நிலைமைகள் மற்றும் கடல் மட்ட உயர்வு ,ஆசிய நாடுகளின் வாழ்வாதாரம், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஏற்றுமதியை பாதிக்கும் என வலியுறுத்தினார்  

வர்த்தக ஒருங்கிணைப்பு,கடன் நிலைத்தன்மை குறித்து கவனம் செலுத்திய  ஜனாதிபதி விக்கிரமசிங்க, ஆசிய நாடுகள் எதிர்கொள்ளும் அபாயங்கள் குறித்தும்  உலக வர்த்தக அமைப்புடன் விதிகள் அடிப்படையிலான பலதரப்பு வர்த்தக முறையை பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தியதோடு பொருளாதார தலையீடுகள் மற்றும் பிரிவினை ஏற்படுத்தல் என்பவற்றை நிராகரித்தார்  
 
வல்லரசு நாடுகளுக்கு இடையிலான தெரிவுக்கான அழுத்தத்துக்கு ஆசியா உடன்படாது என்று தெரிவித்த ஜனாதிபதி, ஆசியான் நாடுகளும் சீனாவும்  ஒன்றையொன்று சார்ந்திருப்பதை எடுத்துக்காட்டியதுடன், ஆசியாவைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்ப்பதாகவும் கூறினார்  
 
ஜப்பானின் ஒத்துழைப்பு அணுகுமுறைக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், ஜப்பான், சீனா, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கிடையில் திறந்த உரையாடலுக்கும் அழைப்பு விடுத்தார். அமைதியான,சபீட்சமான ஆசிய பிராந்தியம் உருவாவதற்கு இது ஒரு   தீர்க்கமான காரணியாகும் என்றும் கூறினார் 

COP 28 இல் முரண்பாடுகளை முறியடித்த  ஒருங்கிணைந்த ஆசியக் குரல் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் இந்த மாநாட்டின் வெற்றியானது பிரதான ஆசிய நாடுகளிடையே ஒருமித்த கருத்திலேயே தங்கியுள்ளது என்றும் ஐனாதிபதி  கூறினார்  

இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் கடல் மட்ட உயர்வு ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுமார் ஒரு பில்லியன் மக்களை பாதிக்கும் என்றும், காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட 15 நாடுகளில் 8   நாடுகள்  ஆசிய நாடுகளாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றும் ஜனாதிபதி  கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .