2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

“ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்துவதை துரிதப்படுத்தவும்”

Editorial   / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர் மற்றும் அதிபர் இடமாற்றங்களை சமநிலைப்படுத்துவது துரிதப்படுத்தப்பட வேண்டும் என கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி கௌரவ அமைச்சரும் பிரதமருமான (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த   பிரதமர், கல்வித் துறையில் இடமாற்றங்களை நிராகரிப்பது நீண்ட காலமாக நிலவும் நடைமுறையாக உள்ளது என்றும், இது இடமாற்றங்களுக்கு இணங்காத பொதுச் சேவையில் உள்ள ஒரே துறை என்றும் தெரிவித்தார். இத்தகைய இடமாற்றங்களுக்கு இணங்கத் தவறிய ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

 பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தலைமையில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டம் அண்மையில் (26) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இயலாமையுடைய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் அனுமதிப்பது தொடர்பான கொள்கைத் தீர்மானங்கள் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. அதற்கமைய, அடுத்த கல்வியாண்டு முதல், அனைத்துத் துறைகளுக்கும் ஒரு ஒதுக்கீட்டு முறைமையின் (quota system) அடிப்படையில் இந்தக் கொள்கை செயற்படுத்தப்படுவதுடன், இயலாமையுடைய மாணவர்களுக்கு தகுதி அடிப்படையிலான மாவட்ட ஒதுக்கீட்டு முறைமையின் (merit-based district quota system) மூலமாகவும் அனைத்துத் துறைகளுக்கும் பல்கலைக்கழக அனுமதி வழங்கப்படவுள்ளது.

மேலும், இந்த அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுக்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் கல்வி தொடர்பான பல்வேறு முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலும் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில்   பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X