Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களையும் முன்னெடுக்க ஜப்பான் உத்தரவாதமளித்துள்ளது.
நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடலின் போதே இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் நிப்பொன் மன்றத்தின் ஸ்தாபக தலைவர் யொஹெய் சசகாவாவை செவ்வாய்க்கிழமை (30) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு யொஹெய் சசகாவா தனது தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக இதன் போது அவர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 100 பாடசாலைகளின் புனரமைப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கான எதிர்காலத் திட்டங்களையும் அவர் முன்வைத்தார்.
இலங்கை மக்களின் முன்னேற்றம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கும், இலங்கையில் சமூக சேவைக்கான அவரது நீண்டகால அர்ப்பணிப்புக்கும் யொஹெய் சசகாவாவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது நன்றியைத் தெரிவித்தார்.
வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .