2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’ஆடையை எதிர்த்தால் 1988க்கு அறிவிக்கவும்’

Editorial   / 2019 ஜனவரி 28 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கர்ப்பிணி ஆசிரியைகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள ஆடைகளை அணிந்துகொண்டு பாடசாலைக்கு வருகை தருவதற்கு, ஒருசில பாடசாலைகளின் அதிபர்கள் தடை விதித்துள்ளனரெனத் தகவல் கிடைத்துள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

தொழில் கௌரவம், சம்பிரதாயம், கலாசாரம் என்பற்றைப் பாதுகாக்கும் வகையில், மருத்துவர்களின் பரிந்துரைக்கமையவே, பாடசாலை ஆசிரியைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஆடையை அணிவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது, அடிப்படையற்ற ஒரு செயற்பாடு எனவும் இது, கவலைக்குரிய விடயமெனவும் தெரிவித்துள்ள கல்வி அமைச்சு, கரப்பிணி ஆசிரியைகளை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடென்றே இது பார்க்கப்படுவதாகவும் ​தெரிவித்துள்ளது.

இவ்வாறு கர்ப்பிணி ஆசிரியைகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள ஆடைகளை அணிய வேண்டாமென எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு, அதிபர்களுக்கு எவ்விதத்திலும் அதிகாரம் கிடையாதெனவும் அவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்தால், கல்வி அமைச்சின் துரித அழைப்பு இலக்கமான 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறும், கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .