2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளை முன்கூட்டி திறக்க கோரிக்கை

Editorial   / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தற்போது மூடப்பட்டுள்ள ஆடைத் உற்பத்தி தொழிற்சாலைகளை, முன்கூட்டியே மீள் திறக்க அனுமதி வழங்குமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஆடை உற்பத்தி அதிகாரசபையால் விடுக்கப்பட்டுள்ள இந்தக் கோரிக்கையில்,

போட்டி நிறுவனங்களால் தமது வியாபார நடவடிக்கைகள் பின்தள்ளப்படுத்தல், ஊழியர் சேமலாப நிதி வைப்பு இடை நிறுத்தப்படுத்தல், வருமானங்கள் இல்லாத 400,000 நேரடி ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுதல் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, இந்த அனுமதியை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் ஆடை உற்பத்தியானது, எதிர்வரும் 3 மாதங்களில் ஏறக்குறைய 1.5 பில்லியன் ரூபாய் இழப்பைச் சந்திக்கும் என்றும் அதன்மூலம், முழு நேர ஊழியர்கள் 4 இலட்சம் பேரும் 2 மில்லியன் பகுதி நேர ஊழியர்களும் பாதிக்கப்படுவார்கள் என்றும் அச்சபை தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த உற்பத்தி நிலையங்கள் உடனடியாக மீள்திறக்கப்படாத சந்தர்ப்பத்தில், தமது போட்டி நிறுவனங்களுக்கு சாதகமான பாரிய பொருளாதார மாற்றம் ஏற்படுமென்றும் குறித்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தொழிலாளர்களின் ஊழிய தொகையினை அதிகரிப்பதற்காக ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி ஆகியவற்றின் வைப்புகளை ஆறு மாத காலத்துக்கு நிறுத்தி வைக்க அனுமதி வழங்குமாறும் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .