Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
J.A. George / 2025 ஏப்ரல் 03 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஸ்வர்ணா விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில், 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருப்பது கண்டறியப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
"2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு இந்த நிலை இருந்தது. அதன் பிறகு, அது தொடர்பான கணக்கெடுப்பு முறையாகச் செய்யப்படவில்லை. இப்போது ஆட்டிசத்தால் பதிக்கப்படும் பிள்ளைகளின் எண்ணிக்கையில் வளர்ச்சி தொடங்கியுள்ளது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை உலகில் அதிகரித்து வரும் போக்கு உள்ளதுடன், இலங்கையிலும் அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம். அதை மிக விரைவாக அடையாளம் காண்பது முக்கியமாகும். ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம் காண முடிந்தால், 90% பேரை இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகளுக்குள் சரிப்படுத்த முடியும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
28 minute ago
39 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
39 minute ago
2 hours ago