2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மஹர பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படாது: அமைச்சர் அதிரடி

Editorial   / 2025 ஜூலை 22 , பி.ப. 12:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹர சிறைச்சாலை வளவில் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என  நீதி,சிறைச்சாலைகள்  மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில்   ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹர  சிறைச்சாலை வளவில் காணப்பட்ட பள்ளிவாசலுக்கு சட்டவிரோதமான பாதைகள் உடாக வெளியாட்கள்  நுழைந்தனர். இதன்போது சிறையில் இருப்பவர்களுக்கு செல்போன்கள், போதைப் பொருட்கள் போன்றவை வீசப்பட்டன. அதேநேரம் இஸ்லாமிய ஒருவர் இறக்கும் போதும் விவாக நிகழ்வுகளின் போதும் பலர் இந்த பள்ளிவாசலுக்கு வந்தனர். இதனால்   அதிகாரிகள், கைதிகளினதும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அதனால் தான் அப்போதைய சிறைச்சாலை அத்தியட்சகரினால் பள்ளிவாசல் மூடப்பட்டது.

இந்த பள்ளிவாசலை மீண்டும் திறந்தாள் அதே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மீண்டும் ஏற்படும். எனவே பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது. அதேவேளை சிறைச்சாலைக்கு சொந்தமான 5 பேர்ச்சஸ்  காணி அங்குள்ளது. தேவையானால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு அந்தக் காணியை வழங்க நடவடிக்கை எடுப்போம். ஆனால் மஹர சிறைச்சாலை வளவினுள் காணப்படும் பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .