2026 மே 17, ஞாயிற்றுக்கிழமை

ஆணுறைகள் காட்டிக்கொடுத்த ரகசியம்

Editorial   / 2026 மே 17 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி நாடகமாடிய இளம் மனைவி, மூன்று மாதங்களுக்குப் பிறகு பொலிஸாரிடம் சிக்கியுள்ளார். வீட்டின் பின்புறம் கண்டெடுக்கப்பட்ட ஆணுறைகளே இந்த கொலை வழக்கின் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன.

சம்பவத்தின் பின்னணி: கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 29 வயதான ராஜேஷ் என்பவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அவரது மனைவி பிரியா (24) தனது பெற்றோருக்கும் மாமியார் தரப்புக்கும் தகவல் வழங்கியபோது, தம்பதியினருக்கு இடையே நீண்டகாலமாக இருந்த குழந்தை இன்மைப் பிரச்சினையே தற்கொலைக்குக் காரணம் என அனைவரும் நம்பினர்.

"குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவர் அடிக்கடி என்னுடன் சண்டையிடுவார், அந்த விரக்தியிலேயே அவர் தூக்கிட்டுக்கொண்டார்" என பிரியா கண்ணீர் மல்கக் கூறிய வாக்குமூலத்தை பொலிஸாரும் ஆரம்பத்தில் சந்தேகம் இன்றி ஏற்றனர்.

அதிர்ச்சியூட்டிய பிரேத பரிசோதனை அறிக்கை: இறுதிச் சடங்குகள் முடிந்து பத்து நாட்கள் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கை, வழக்கை தலைகீழாக மாற்றியது. ராஜேஷ் தூக்கில் தொங்குவதற்கு முன்பே கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருப்பதும், அவரது உடலில் போராட்டத்தின் அடையாளமாக நகக்கீறல்கள் இருப்பதும் அதில் உறுதியானது. இதனையடுத்து, இந்தத் தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய பொலிஸார் ரகசிய விசாரணையைத் தொடங்கினர்.

காட்டிக்கொடுத்த 'இரண்டாவது' செல்போன்: பிரியாவின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட பொலிஸார், அவரது அறையைச் சோதனையிட்டபோது யாருக்கும் தெரியாத இரண்டாவது கைபேசி ஒன்றைக் கைப்பற்றினர். அத்துடன் அவரது ஹேண்ட்பேக்கில் பயன்படுத்தப்படாத ஆணுறைகளும் இருந்தன. மேலும், வீட்டின் பின்புறம் இருந்த புதர்ப்பகுதியில் வீசப்பட்டிருந்த பயன்படுத்தப்பட்ட ஆணுறைகளைக் கண்டெடுத்த பொலிஸார், ராஜேஷின் மரணத்தின் பின்னணியில் ஏதோ ஒரு சட்டவிரோத கும்பல் இருப்பதை உணர்ந்தனர்.

விபச்சார வலை மற்றும் காதல்: பிரியாவின் இரண்டாவது கைபேசியை ஆய்வு செய்தபோது, அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக வலைதளங்கள் மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது. வாடிக்கையாளர்களிடம் முன்பணம் பெற்று, தனது கணவர் வேலைக்குச் சென்ற நேரத்தில் அவர்களை வீட்டிற்கே வரவழைத்து உல்லாசம் அனுபவித்துள்ளார். இவ்வாறு வாடிக்கையாளராக வந்த அருண் (28) என்பவருடன் பிரியாவுக்குக் காதல் ஏற்பட்டுள்ளது.

தங்கள் காதலுக்குத் தடையாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்டிவிட்டு, அருணைத் திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்ட பிரியா, ஒருநாள் இரவு காதலனுடன் இணைந்து ராஜேஷின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் அதனைத் தற்கொலை போலக் காட்ட சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியுள்ளனர்.

நடந்தது எங்கே? பரபரப்பை ஏற்படுத்திய இந்த அதிர்ச்சிச் சம்பவம் கோவா மாநிலத்தில் உள்ள ஒரு தோட்டப் பகுதியில் அமைந்துள்ள தனிமையான வீட்டில் இடம்பெற்றுள்ளது. தற்போது பிரியா மற்றும் அவரது காதலன் அருண் ஆகிய இருவரையும் கைது செய்துள்ள பொலிஸார், அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .