2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஆணைக்குழுவுக்கு அதிகாரங்கள் அதிகரிப்பு

Thipaan   / 2016 பெப்ரவரி 02 , பி.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரங்கள்  மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் ஜனாதிபதியினால் வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. வங்கிக் கணக்குகளை சோதனைக்கு உட்படுத்துவதற்கு அவ்வாணைக்குழுவுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம், ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தும் நபர், அவரின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வங்கிக் கணக்குகளை அழைப்பிப்பதற்கும் இதனூடாக அதிகாரமளிக்கப்பட்டுள்ளது என்று அவ்வாணைக்குழுவின் செயலாளர் லெஸ்லி டி சில்வா தெரிவித்தார்.

இந்த ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள மனுக்களின் தன்மையின் பிரகாரம், வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்களை பயனுள்ளதாக்குவதற்கு மேலதிக அதிகாரம் தேவையென அவ்வாணைக்குழு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X