R.Tharaniya / 2025 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஆன்லைன் மூலம் கொள்வனவு செய்த பொருளை பெற்றுக் கொண்டு அதற்குரிய பணம் வழங்காது இளைஞன் தப்பி ஓடியதாக கடந்த புதன்கிழமை (20) அன்று முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
ஆன்லைன் மூலம் ரூபாய் 45000 பெறுமதியான பொருளை கொள்வனவு செய்து உரிய பணத்தை வழங்காமல் தப்பியோடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டலில் செயற்பட்ட பல்வேறு முறைப்பாட்டு பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம்.ஹசீப் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு சம்மாந்துறை 01 பகுதியைச் சேர்ந்த20 வயதுடைய இளைஞனை கைது செய்தனர்.
இதன் போது கைதான இளைஞனிடம் இருந்து ஆன்லைன் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருள் மீட்கப்பட்டுள்ளது டன் சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை (22) அன்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
4 hours ago
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
8 hours ago