Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 28 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கனியர்களை அம்போ எனக் கைவிட்டதை போல் தமிழர்களை கைவிடக்கூடாது என தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜோ பைடன் நிர்வாகத்தில் இலங்கை இனப்பிரச்சினை முன்னுரிமை பெற்ற ஒரு
பிரச்சினையாக இருக்க வேண்டும். இதை தூதுவர் அலைனா டெப்ளிட்ஸ் அறிய
வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று (27) அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில்
தெரிவித்துள்ளதாவது, “அரசாங்க - கூட்டமைப்பு பேச்சுவார்த்தை யோசனையை நாம்
வரவேற்கின்றோம். ஐநா மனித உரிமை ஆணையக அவை நடக்க உள்ள இந்த
வேளையில், இந்த பேச்சு சந்தேகத்தை கிளப்புவது இயல்பானதே. உண்மையில்
சந்தேகப்பட் தேவையில்லை. இதுதான் உண்மை காரணம். இலங்கையில் இன்று
தேசிய நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஆகவே, பேச வேண்டிய தேவை அனைத்து
தரப்புக்கும் ஏற்படுகிறது.
“இதற்கு அனுசரணை வழங்குகின்ற அமெரிக்க அரசாங்கம் வழமைபோல்
தமிழர்களை கைவிடக்கூடாது. சமீபத்தில், ஆப்கன் நாடு மக்களை அம்போ என
அமெரிக்க அரசு கை விட்டது என அமெரிக்க மக்களே கூறுகிறார்கள்.
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல, ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும்
இலங்கை அரசு பேச வேண்டும். அனைத்து தமிழ்க் கட்சிகளும் இத்தகைய ஒரு
அரங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு கூட்டமைப்பு ஆவன செய்ய
வேண்டும்.
“அதேபோல் இலங்கை இனப்பிரச்சினை, வட கிழக்கை மட்டும் சார்ந்தது அல்ல.
இனப்பிரச்சினையின் தாக்கங்கள மலையகம் உட்பட தென்னிலங்கை
மாவட்டங்களிலும் உணரப்படுகின்றன.
“தனிநாட்டு கோரிக்கை, வட கிழக்கை மட்டும் சார்ந்தது. இப்போது அப்படியல்ல.
ஆகவே, முழு நாட்டையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். அதேபோல் தமிழ்
பேசும் முஸ்லிம் மக்களும் உள்வாங்கப்பட வேண்டும்.
“ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் “சடுதியான வாபஸ்” நிறைய
பேரை யோசிக்க வைக்கிறது. ஐ.நா மனித உரிமை தொடர் வருவதால், இந்த
சந்தேகம் இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் அதிகரிகின்றது” எனத்
தெரிவித்துள்ளார்.
1 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
4 hours ago