Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Freelancer / 2022 ஜனவரி 15 , மு.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வை மிகவும் எளிமையான முறையில் நடத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற பிரதானிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று அறியமுடிகிறது.
இதன்படி, இவ்வருட நிகழ்வில் வணக்கம் செலுத்துதல் மற்றும் வாகன அணிவகுப்பு இடம்பெறாது என பாராளுமன்ற பிரதானிகள் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதியை வைபவத்துக்கு வரவேற்கும் வகையில் பொலிஸ் கலாசாரப் பிரிவினர் பாராளுமன்றத்துக்கு முன்பாக சில கலாசார வணக்கங்களை மாத்திரம் வழங்குவர்.
இதேவேளை, அரசியலமைப்பின் 33 (2) பிரிவின் மூலம் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதற்கு முன்னதாக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு ஜனாதிபதியின் தலைமையில் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.
அழைக்கப்பட்ட அதிதிகளின் வருகை எதிர்வரும் 18ஆம் திகதி காலை 09.15 மணிக்கு இடம்பெறவுள்ளதுடன், அதில் முதலாவதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகையும் இடம்பெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வருகையின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வருகைதரவுள்ளார்.
பாராளுமன்ற கட்டடத்தின் பிரதான வாயிலுக்கு அருகில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க வரவேற்கவுள்ளனர்.
பின்னர், படைக்கல சேவிதர் மற்றும் உப படைக்கல சேவிதரின் முன்னிலையில் சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் ஆகியோரால் ஜனாதிபதி சபைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது அமர்வின் சம்பிரதாய திறப்பு விழாவுக்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள், முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள், பிரதம நீதியரசர்கள் , உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் சட்டமா அதிபர் உட்பட பல விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
விழாவின் அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டும் என்று படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago