Freelancer / 2025 ஏப்ரல் 30 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
மே தினத்தன்று அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்கள் இடம்பெறும் பகுதிகளிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி வெளி மாகாணங்களில் நடைபெறும் மே தின அணிவகுப்புகள் மற்றும் கூட்டங்களுக்குத் தேவையான போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, உரிய அதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகம் ஏற்கனவே தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதாக போலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இம்முறை மே தினத்தன்று கொழும்பில் 15 இடங்களில் அணிவகுப்புகள், கூட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொழும்பு நகரம் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நடைபெறும் மே தின அணிவகுப்புகள், பேரணிகள் மற்றும் கொண்டாட்டங்கள் காரணமாக ஏதேனும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், சாரதிகள் அந்தப் பகுதிகளைத் தவிர்த்து மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸ் அறிவுறுத்தியுள்ளது. (a)
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago